உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள பூங்கா, மோர்தானா அணை, ராஜா தோப்பு அணை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளதால் கோரொனா நோய்த் தொற்று கருத்திற் கொண்டு மாட்டுப்பொங்கல் பண்டிகையான ஜனவரி 15ஆம் தேதி முதல் கரி நாளான ஜனவரி 17ஆம் தேதிவரை மொத்தம் மூன்று நாட்களுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.