வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் உட் கோட்டத்திற்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகரைச் சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார், சத்துவாச்சாரி நலம் மருத்துவமனை பின்புரத்தை சேர்ந்த 21 வயதுடைய வின் ராஜ் என்கிற வினோத்குமார் மற்றும் காட்பாடி குமரப்பா நகரைச் சேர்ந்த 24 வயது உடைய அக்ஷய் என்கிற அக்ஷய குமார் ஆகிய மூன்று பேரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.