நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வரும் 31-ம் தேதி போடப்படும். 30-ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ தடுப்பு மருந்து அளித்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார்- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.
வருகிற ஜனவரி 31-ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்று தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.