குறள் : 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
மு.வ உரை :
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
கலைஞர் உரை :
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.
Kural 267
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku
Explanation :
Just as gold is purified as heated in the fire will those shine who have endured the burning of pain (in frequent austerities)
இன்றைய பஞ்சாங்கம்
29-01-2021, தை 16, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை துதியை. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 29.01.2021
மேஷம்
இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.
ரிஷபம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
மீனம்
இன்று தொழில் ரீதியான பொருளாதார நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். உறவினர்களால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலக உணவு விஷயத்தில் கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,