குறள் : 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
மு.வ உரை :
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
கலைஞர் உரை :
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
சாலமன் பாப்பையா உரை :
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.
Kural 264
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum
Explanation :
If (the ascetic) desire the destruction of his enemies or the aggrandizement of his friends it will be effected by (the power of) his austerities
இன்றைய பஞ்சாங்கம்
26-01-2021, தை 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 26.01.2021
மேஷம்
இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மிதுனம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
கடகம்
இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
சிம்மம்
இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
தனுசு
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மகரம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
மீனம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
Today rasi palan - 26.01.2021
இன்றைய ராசிப்பலன் - 26.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,