வேலூர்: பொய்கை மாட்டு சந்தையில் 2.5 கோடிக்கு மாடுகள் வியாபாரம் நடந்துள்ளது.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டு சந்தை பிரசித்திப்பெற்றது. நேற்று நடைபெற்ற சந்தையில் காளை, கன்று, பசுக்களை வாங்க ஏராளமானவர்கள் குவிந்தனர்.
சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே உற்சாகமாக காணப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், காளை மாடுகளுக்காக புத்தம் புதிய கயிறுகளையும், சலங்கைகள், காளைகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்களையும் ஏராளமானவர்கள் வாங்கிச் சென்றனர்.
காளைகள், பசுக்களின் விலையும் வழக்கத்தைவிட 10 சதவீதம் விலை அதிகமாகவே இருந்தது.அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கால்நடைகள், கால்நடைகளுக்கான கயிறுகள் உள்ளிட்ட பொருள்கள் என ஒட்டுமொத்தமாக இரண்டரை கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளதாக சந்தையின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.