குறள் : 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை :
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

கலைஞர் உரை :
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

சாலமன் பாப்பையா உரை :
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

Kural 260
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum

Explanation :
All creatures will join their hands together  and worship him who has never taken away life  nor eaten flesh




இன்றைய பஞ்சாங்கம்
22-01-2021, தை 09, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.29 வரை பின்பு வளர்பிறை தசமி. பரணி நட்சத்திரம் மாலை 06.40 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00    
இன்றைய ராசிப்பலன் - 22.01.2021

மேஷம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

ரிஷபம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.

விருச்சிகம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Today rasi palan - 22.01.2021
இன்றைய ராசிப்பலன் - 22.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,