குறள் : 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை :
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர் ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

கலைஞர் உரை :
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

Kural 258

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon

Explanation :
The wise who have freed themselves from mental delusion will not eat the flesh which has been severed from an animal

Today rasi palan - 20.01.2021


இன்றைய  பஞ்சாங்கம்
20-01-2021, தை 07, புதன்கிழமை, 

சப்தமி திதி பகல் 01.15 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் -  20.01.2021

மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 12.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மனகுழப்பம் குறையும்.

கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.36 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

துலாம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

மகரம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். 

மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

இன்றைய ராசிப்பலன் - 20.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,