பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று மாவட்டங்களில் 19.68 கோடிக்கு மது விற்பனையானது.

 
திருப்பத்தூர் ராணிப்பேட்டை வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 199 டாஸ்மார்க் கடைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை படுஜோராக நடைபெற்றது. குறிப்பாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 111 கடைகள் உள்ளன.

அந்தக் கடைகளில் 13ஆம் தேதியான முதல் நாளில் 4 கோடியே 89 லட்சத்திற்கும், அடுத்த நாளில் 6 கோடியே 79 லட்சத்திற்கும் மது விற்பனையானது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 8 லட்சத்திற்கும் மது விற்பனை ஆகிய உள்ளதாக வேலூர் டாஸ்மாக் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.