வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மாதம் 15, 26 மற்றும் 28 ஆகிய மூன்று தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மாதம் மூன்று தினங்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிளாஸ்டின் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு 15-1-2021 மற்றும் குடியரசு தினமான 26-01-2021 வள்ளலார் பிறந்த தினமான 28-01-2021 ஆகிய மூன்று தினங்களில் டாஸ்மார்க் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் செயல்படும் பார்கள் ஆகியவற்றினை மூட மாவட்ட ஆட்சியர் கிலாஸ்டின புஷ்பராஜ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவினை மிரும் மதுக் கூடங்கள் மற்றும் மது கடைகள் ஆகியவற்றில் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என்றும் மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.