குறள் : 255
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.
மு.வ உரை :
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கலைஞர் உரை :
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
சாலமன் பாப்பையா உரை :
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
Kural 255
Unnaamai Ulladhu Uyirnilai Oonunna
Annaaththal Seyyaadhu Alaru
Explanation :
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh hell will not open its mouth (to let him escape out after he has once fallen in)
இன்றைய பஞ்சாங்கம்
15-01-2021, தை 02, வெள்ளிக்கிழமை,
துதியை திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம். கரி நாள். கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.00 முதல் 8.00 வரை, காலை 10.00 முதல் 10.30 வரை.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 15.01.2021
மேஷம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை 05.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் நிதானம் தேவை.
சிம்மம்
இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பண பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
கும்பம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
Today rasi palan - 15.01.2021
இன்றைய ராசிப்பலன் - 15.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,