குறள் : 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்.
மு.வ உரை :
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
கலைஞர் உரை :
டைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை :
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
Kural 253
Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam
Explanation :
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand) the mind of him who feasts with pleasure on the body of another (creature) has no regard for goodness
இன்றைய பஞ்சாங்கம்
13-01-2021, மார்கழி 29, புதன்கிழமை,
அமாவாசை திதி பகல் 10.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.28 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பின்இரவு 05.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. போகிப் பண்டிகை.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 - 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 13.01.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வேலையில் கவனம் தேவை.
கடகம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
Today rasi palan - 13.01.2021
இன்றைய ராசிப்பலன் - 13.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,